இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இல்லையென்று சொல்லுமனம் இல்லாதவன்
ஈடுஇணை இல்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலை கேட்கிறவன்
எண்ணங்களை இதயங்களை பார்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும்
சொல்லிக்காட்டுங்கள்
அன்புநோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
No comments:
Post a Comment